தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

பாடல் ஷூட்டிங்குடன் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது.இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங்கிற்கு இடையே மரியாதை நிமித்தமாக தெலுங்கானா முதல்வரை நேரில் சந்தித்துள்ளார் விஜய்.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

తమిళ సినీ హీరో @actorvijay ఈ రోజు ప్రగతి భవన్ లో ముఖ్యమంత్రి శ్రీ కె. చంద్రశేఖర్ రావును మర్యాదపూర్వకంగా కలిసారు. ఈ సందర్భంగా విజయ్ ని సీఎం శాలువాతో సన్మానించారు. pic.twitter.com/BsPqiCwDaV

— Telangana CMO (@TelanganaCMO) May 18, 2022

Pleasantly surprise meet. Happy to meet @actorvijay garu along with @directorvamshi in Hyderabad. Thanked #Thalapathy for his contribution for our #GreenIndiaChallenge by planting a sapling the other day. Had a great time with the star.😊 pic.twitter.com/JbpDgWDx1i

— Santosh Kumar J (@MPsantoshtrs) May 18, 2022

Was a pleasure meeting Honorable @TelanganaCMO Sri.KCR garu along with @actorvijay Sir... :)@MPsantoshtrs pic.twitter.com/O8E4Gu4rfR

— Vamshi Paidipally (@directorvamshi) May 18, 2022