தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.திரையரங்குகளில் கொரோனாவிற்கு பிறகு வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது மாஸ்டர்.

இந்த படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்திருந்தன,இந்த படத்தின் பாடல்கள் 2020-ல் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட தமிழ் ஆல்பம் என்ற பெருமையை பெற்று உலகளவில் அதிகம் கேட்கப்பட்ட பட்டியலிலும் இடம் பிடித்து அசத்தியுள்ளது என்ற சந்தோஷமான செய்தியை இசையமைப்பாளர் அனிருத் பகிர்ந்துள்ளார்.உலகளவில் தமிழ் ஆல்பம் சாதனை படைத்தளத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#Master makes it to the global music charts as the highest- streamed Tamil album of 2020 😊
Thank you @actorvijay sir @Dir_Lokesh @XBFilmCreators @7screenstudio @Jagadishbliss and all the fans 🤗 pic.twitter.com/V0dKgzioga

— Anirudh Ravichander (@anirudhofficial) December 22, 2021