பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பல மக்களும்,பிரபலங்களும் தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.இதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் முதல் ஆளாக நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் விஜய்.பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட இவர் வாக்களிக்க வந்தபோது பெரிய கூட்டம் சேர்ந்தது.இவர் தனது மாருதி செலெரியோ காரில் வந்து வாக்களித்தார்.

அந்த காரின் நம்பர் பிளேட்டை வைத்து சில ஆப் மூலம் செக் செய்து விஜய் வந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தாமல் இருக்கிறார் என்று ஆன்லைனில் சில தகவல்கள் வந்தன.தற்போது இந்த விவகாரம் குறித்து விஜய் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜயின் PRO , விஜய் இன்சூரன்ஸ் கட்டவில்லை என்று வந்த தகவல் போலியானது,அந்த மாருதி காருக்கான இன்சூரன்ஸ் வரும் மே மாதம் வரை உள்ளது என்று அதன் காப்பி ஒன்றையும் வெளியிட்டு , தேவையற்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

For the past few days, a news stating that #ThalapathyVijay's car insurance is still due has been doing the rounds on social media. Here is a copy of the insurance, in which it is clearly stated that the insurance is valid till May 28, 2022! pic.twitter.com/d9tfYuIaEM

— RIAZ K AHMED (@RIAZtheboss) February 21, 2022