வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்ததன் படி தளபதி விஜயின் மாஸான ப்ரோமோவோடு தளபதி 67 படமான லியோ திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. இதர அறிவிப்புகள் மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைகிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மாத்யூ தாமஸ் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கும் லியோ திரைப்படத்திற்கு, சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில், தினேஷ் மாஸ்டரின் நடன இயக்கத்தில், அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.

முன்னதாக லியோ திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்ற BLOODY SWEET பாடல் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த BLOODY SWEET பாடலில் பணியாற்றிய மேக்கிங் வீடியோவை முன்னணி கிட்டார் இசைக்கலைஞர் கேபா அவர்கள் வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து கேபா பணியாற்றும் அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…