இந்த ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ‘தளபதி 67’ திரைப்படத்தின் தலைப்பு நேற்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. பிரத்யேக வீடியோவுடன் தளபதி விஜய் நீள் கத்தியை பட்டறை செய்து கொண்டு இருப்பது போல மிரட்டலான வீடியோவுடன் படத்திற்கான தலைப்பு ‘லியோ என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் லியோ படத்தின் டைட்டில் வீடியோ ‘பிலடி ஸ்வீட் என்ற வசனத்துடன் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் மிரட்டலான வீடியோவுடன் அனிரூத்தின் அசத்தலான பின்னணி பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து. அனிரூத் உடன் இணைந்து சித்தார்த் பஸ்ரூர் பாடிய இப்பாடலை ஹைசன் பர்க் எழுதியுள்ளார். ஹைசன்பர்க் – அனிரூத் கூட்டணி இதற்கு முன்பாக ‘விக்ரம்’ திரைப்படத்தில் ‘வேஸ்டட்’ என்ற பாடலில் பணியாற்றியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பாடல் மற்றும் இசை உரிமத்தை பெற்றுள்ள ‘சோனி மியுசிக்’ ரசிகர்களை அனைவரையும் அதிகம் கவர்ந்த டைட்டில் வீடியோவின் பின்னணி பிரத்யேக பாடலை தற்போது ஒலி வடிவில் ‘பிலடி ஸ்வீட் என்ற பெயரில் அனைத்து தளங்களிலும் வெளியிட்டுள்ளது. இதனை படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.சர்ப்ரைஸாக வெளியான இந்த பாடலினால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனிரூத் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த பாடலை தற்போது ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். வீடியோவாக மட்டுமல்லாமல் தற்போது ஆடியோவாகவும் லியோ படத்தின் பிலடி ஸ்வீட் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது நிச்சயம் தளபதி ரசிகர்களுக்கு Double Treat தான்..

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக வெளிவரவிருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி. கன்னடா உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் விஜயுடன் இணைந்து 14 வருடம் கழித்து திரிஷா நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் சஞ்சய் தத், ஆக்ஷன்கிங் அர்ஜுன், மிஸ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்திவ் தாமஸ் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஒடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் தொலைகாட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சியும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.