எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த முதல் விமர்சனம் தற்போது வெளிவந்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் தளபதி விஜய் தனது அடுத்த படமாக தளபதி 68 திரைப்படத்தை தொடங்கி இருக்கிறார் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கைகோர்க்கும் தளபதி விஜயின் 68 வது படமாக தயாராகும் இந்த தளபதி 68 திரைப்படம் விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக தயாராகிறது. இத்திரைப்படத்தின் எதிராக அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளிவரும் என தளபதி 68 பட குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக லாக் டவுன் சமயத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த திரையரங்குகளை பார்வையாளர்களால் நிறைய வைத்து திரையரங்குகளை பழைய நிலைக்கு கொண்டு வந்து திருவிழா கொண்டாட வைத்த திரைப்படம் என்றால் அது மாஸ்டர் திரைப்படம் தான். அப்படி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்திருக்கும் திரைப்படம் தான் லியோ.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா, தளபதி விஜய் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருக்கும் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில் வெளிவரும் லியோ படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி இருக்கும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை அக்டோபர் 5ம் தேதி வெளிவர உள்ளது. ஏற்கனவே போஸ்டர்களில் வெளிவந்த கழுதைப்புலி உடனான ஒரு சண்டைக் காட்சி மிகவும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும் என தகவல்கள் வெளிவந்த நிலையில், லியோ திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களோடு இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றிய ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி லியோ படத்தின் ட்ரெய்லரை பார்த்து விட்டு தனது முதல் விமர்சனத்தை வெளியிட்டு இருக்கிறார். முதலில் ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு போஸ்டரில் இருக்கும் கழுதைப்புலி சண்டைக் காட்சியை குறிப்பிட்டு, "இந்த சீன் அப்போ என்ன ஆகப் போறீங்களோ" என பதிவிட்ட இயக்குனர் தீரஜ் வைத்தி, தற்போது லியோ படத்தின் ட்ரெய்லரை பார்த்த பிறகு," இப்போது தான் லோகேஷ் காகராஜை சந்தித்து ட்ரெய்லரை பார்த்தேன். ட்ரெய்லரை பார்த்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரையில தான் இருக்கும்!" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இவரது இந்த பதிவுகளால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். இயக்குனர் தீரஜ் வைத்தியின் அந்தப் பதிவுகள் இதோ...

Just met Lokesh and saw the trailer! Trailer பாத்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்🤩🔥🔥🔥#Leo #LeoTrailerFromOctober5

— Deeraj Vaidy (@DeerajVaidy) October 3, 2023