ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்கான பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல் இந்த இசை வெளியீட்டு விழாவிலும் தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி கேட்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். இதற்கான அறிவிப்புகள் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் வெளிவரும் என காத்திருக்கும் நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவிற்கான அனுமதிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று அது சார்ந்து பலவிதமான சர்ச்சைகளை வதந்திகளாக சமூக வலைதளங்களில் பலரும் பரப்பி வந்தனர். இந்த நிலையில் இது குறித்து லியோ பட குழுவினர் சரியான விளக்கம் அளித்து பதிலளித்து இருக்கின்றனர். இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக தளபதி விஜய் இணைந்து நடித்திருக்கும் லியோ திரைப்படம் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் படமாக வெளிவர இருக்கிறது.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த லியோ திரைப்படத்தின் முதல் பாடலாக நான் ரெடி பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதை தொடர்ந்து கடந்த வாரத்தில் தொடர்ந்து வரிசையாக 4 அதிரடியான போஸ்டர்கள் வெளிவந்தன. மேலும் அடுத்தடுத்து லியோ படத்தில் டிரெய்லர் மற்றும் முதல் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது.எனவே இறுதி கட்டப் பணிகளும் மிரட்டலான VFX பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற கழுதைப்புலி உடனான சண்டைக் காட்சியின் VFX பணிகள் அனைத்தும் தற்போது பெங்களூரில் உள்ள முன்னணி VFX நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதனிடையே பிரம்மாண்டமான லியோ இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் சில காரணங்களுக்காக வேண்டுமென்றே இசை வெளியீட்டு விழாவிற்கான அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன இந்த நிலையில் இந்த வதந்திகள் எதுவும் உண்மை இல்லை என தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இசை வெளியீட்டு விழா குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த லியோ படக்குழுவின் பதிவு இதோ...