தளபதி விஜயின் லியோ திரைப்படத்திலிருந்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ஹெரால்ட் தாஸ் கதாபாத்திரத்தின் GLIMPSE வீடியோவை அவரது பிறந்த நாளான இன்று ஆகஸ்ட் 15ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் இன்று தனது 62 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் தனக்கென தனி ஸ்டைலில் அதிரடியான கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் அடுத்தடுத்து தமிழில் மேதாவி, தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் தலைவர் 170 படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக லியோ திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் மிக முக்கிய அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2021-ல் மெகா ஹிட்டான மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் லியோ. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்றியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக கடந்த ஜூலை 29ஆம் தேதி நடிகர் சஞ்சய் அவர்களின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் லியோ படத்தில் அவர் நடித்திருக்கும் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் அட்டகாசமான புதிய GLIMPSE ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த நிலையில் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தும் வகையில் ஹெரால்ட் தாஸ் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் மிரட்டலான புதிய GLIMPSE வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை அர்ஜுன் அவர்களின் லுக்கை காட்டாத நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஆக்ஷன் கிங் அர்ஜுனன் கதாபாத்திரத்தின் இந்த GLIMPSE வீடியோ தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…