தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீஸர் வரும் வாரத்தில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.தற்போது இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு விசில் என்று தெலுங்கில் பெயரிட்டுள்ளனர்.

Here is the first look of Thalapthay Vijay in #Whistle @ags_production @actorvijay @Atlee_dir @archanakalpathi #Nayantara @actor_vivek @am_kathir @iyogibabu @dop_gkvishnu @anthoyLruben @muthurajthangvl @Lyricist_Vivek @sonymusic @EastCoastPrdns @smkoneru pic.twitter.com/ClUT8lIu80

— A.R.Rahman (@arrahman) October 6, 2019