தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.இந்த படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் நாளை இசை வெளியீட்டு விழாவில் அல்லது அட்லீயின் பிறந்தநாளான செப்டம்பர் 21 அன்று வெளியாகும் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.

ஆனால் இந்த படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் அக்டோபர் மாதம் தான் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.இதை வைத்து பார்க்கும்போது இந்த படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் காந்தி ஜெயந்தி அல்லது ஆயத பூஜைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.