தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக, பலகோடி தமிழ் ரசிகர்களின் அபிமானம் பெற்ற ஃபேவரட் ஹீரோவாக, அடுத்தடுத்து ஒவ்வொரு படத்திலும் வசூல் சாதனை செய்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் தளபதி விஜய். முன்னதாக இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட் ஆனது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார் தளபதி விஜய். அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகர் மற்றும் நடிகைகளின் டாப் 10 பட்டியலை ட்விட்டர் இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த டாப் 10 பட்டியலில் தளபதி விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகைகளின் டாப் 10 பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ட்விட்டர் இந்தியா வெளியிட்ட டாப் 10 பட்டியல் பின்வருமாறு,

டாப் 10 தென்னிந்திய நடிகர்கள்,

1) தளபதி விஜய்
2) பவன் கல்யாண்
3) மகேஷ் பாபு
4) சூர்யா
5) ஜூனியர் NTR
6) அல்லு அர்ஜுன்
7) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
8) ராம் சரண்
9) தனுஷ்
10)அஜித் குமார்

டாப் 10 தென்னிந்திய நடிகைகள்,

1) கீர்த்தி சுரேஷ்
2) பூஜா ஹெக்டே
3) சமந்தா
4) காஜல் அகர்வால்
5) மாளவிகா மோகனன்
6) ரகுல் பிரீத் சிங்
7) சாய்பல்லவி
8) தமன்னா
9) அனுஷ்கா செட்டி
10)அனுபமா பரமேஸ்வரன்

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள, தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021’s most Tweeted about actors in South Indian entertainment ❤️ pic.twitter.com/EwpGkshZok

— Twitter India (@TwitterIndia) December 12, 2021