தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இன்டர்நெட்டை கலக்கி வருகின்றன.உலகளவில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இந்த படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் தீம் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் படம் குறித்த ப்ரோமோக்கள் சிலவற்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது ஒரு அதிரடியான புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.மியூசிக் இல்லாமல் பல சவுண்ட்களை மட்டும் வைத்து வித்தியாசமான இந்த ப்ரோமோ டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sounds from the world of #Beast 🔥#BeastFromTomorrow 😎@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #TwitterExclusive #OnlyOnTwitter #OOT pic.twitter.com/aNrYuPHdm6

— Sun Pictures (@sunpictures) April 12, 2022