தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த மாஸ்டர் படம் கடைசியாக வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா,டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இவர்களுடன் பல நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முதல் பாடலான அரபி குத்து பாடல் ப்ரோமோ நேற்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.ப்ரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன்,நெல்சன்,அனிருத் ஆகியோர் அடிக்கும் ஜாலியான லூட்டிகள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.இவர்களுடன் தளபதி விஜயும் ஆடியோ காலில் சர்ப்ரைஸ் கொடுக்க ப்ரோமோ செம ரிலீசாகி சில மணி நேரங்களிலேயே செம ஹிட் அடித்தது.

பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவரான விஜயின் படம் குறித்த அறிவிப்புகள் மற்றும் பாடல்கள் எப்போதும் சமூகவலைத்தளங்களில் புதிய சாதனைகளை படைக்கும்.அப்படி இந்த ப்ரோமோ வீடியோவும் பெரிய வரவேற்பை பெற்று அதிகம் பார்க்கப்பட்ட பாடல் ப்ரோமோவாக உருவெடுத்துள்ளது.ஒரு நாள் முடிவில் 8 மில்லியன் பார்வையாளர்களுடன் , 1 மில்லியன் லைக்குகளை நோக்கி நகர்ந்து வருகிறது.இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

A MASSive 8M+ views in 24 hours for #BeastFirstSingle promo! Countdown begins for #ArabicKuthu

▶️ https://t.co/dSqP97VTr1#ArabicKuthuOnFeb14 @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @manojdft @Nirmalcuts #Beast pic.twitter.com/4McWvVwsAE

— Sun Pictures (@sunpictures) February 8, 2022