தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.இந்த படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இயக்குகிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சில வாரங்களில் தொடங்கவுள்ளது என்ற தகவல் கிடைத்து வருகிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்ற அறிவிப்பை படக்குழுவினர் சில மணி நேரங்களுக்கு முன் அறிவித்தனர்.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.விஜயுடன் முதல்முறையாக தமன் இணைவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Welcoming onboard our darling music director @MusicThaman #Thalapathy66@actorvijay @directorvamshi @iamRashmika #ThamanJoinsThalapathy66 pic.twitter.com/fP3M29kcPJ

— Sri Venkateswara Creations (@SVC_official) April 5, 2022