தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் 2021 பொங்கலை முன்னிட்டு வெளியானது.

கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றி படமாக மாறியது மாஸ்டர்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் Beast படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றனர் என்பதை ஒரு புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர்.தங்கள் முதல் படத்தினை விஜயுடன் தொடங்குவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளனர்பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படத்தின் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.இந்த சர்ப்ரைஸ் அறிவிப்பால் தளபதி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

#Thalapathy66... Sharing with you all an exciting update about my next film with The #Thalapathy @actorvijay Sir, Produced by #DilRaju garu & #Shirish garu under my home banner @SVC_official pic.twitter.com/R24UhFGNlW

— Vamshi Paidipally (@directorvamshi) September 26, 2021