தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

பாடல் ஷூட்டிங்குடன் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது.இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது,இந்த படப்பிடிப்பை நிறைவு செய்து விஜய் சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார்.தற்போது இந்த இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

And it's a schedule wrap for #Thalapathy66

The team had an awesome time shooting for important sequences in this schedule. Excited to kickoff our next schedule super soon.#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/aaIP8ssAW2

— Sri Venkateswara Creations (@SVC_official) May 26, 2022