தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

இது பாடல் ஷூட்டிங்காக இருக்கலாம் என்று தெரிந்தது.இது பாடல் ஷூட்டிங் தான் என்பதை உறுதி செய்யும்படி ராஷ்மிகா சில நடன கலைஞர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.ட்ரீம் டூயட் பாடலாக உருவாகும் இந்த பாடலுக்கு ஷோபி நடனமமைக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

View this post on Instagram

A post shared by V_NOTH_DIMPLE_BOY 🔷 (@vinothdancer_official)

View this post on Instagram

A post shared by Nithila Rb (@nithilarb)