தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியையொட்டி வெளியான பிகில் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.அட்லீ இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து விஜய் மாநகரம்,கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படம் ஏப்ரல் 2020-ல் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதுகுறித்து நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தபோது,இந்த செய்தி வதந்தி தான் என்பதை தெளிவுபடுத்தினர்.