தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வட சென்னை பகுதியில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் முக்கிய காட்சிகளுக்காக, டெல்லி விரைந்தனர் என்பது தெரியவந்தது.

படத்தின் நாயகி மாளவிகா மோஹனன், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியதாக சமீபத்தில் பதிவு செய்துள்ளார். டெல்லி கல்லூரியில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிகிறது. இதில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்து வருகின்றனர். 2020 ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

தற்போது இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது என நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தகவல் வெளியானது. இதன் பிறகு படக்குழு ஷிமோகா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.