பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள தர்பார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் 2020 அன்று வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தில் சதிஷ்சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர்.இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.இந்த வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
#Thalaivar168Poojai #Thalaivar168 pic.twitter.com/bo3jHzOnvi
— Sun Pictures (@sunpictures) December 11, 2019