தமிழ் சினிமா ரசிகர்கள் தல என கொண்டாடும் நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. சதுரங்கவேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவில் தயாராகும் வலிமை திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து நடிகை ஹூமா குரேஷி, கார்த்திகேயா , யோகி பாபு மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அதிரடி திரைப்படமான வலிமை படத்தில் திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

முன்னதாக வெளியான வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் நாங்க வேற மாறி என்னும் முதல் பாடல் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து ரஷ்யாவில் நடைபெற்று வந்த வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது .

இந்நிலையில் ரஷ்யாவில் வலிமை படப்பிடிப்பை நிறைவு செய்த தல அஜித் குமாரின் அடுத்த கட்ட திட்டம் குறித்த தகவல் வெளியானது. பைக் ரைடிங்கில் மிகவும் ஆர்வமுள்ள தல அஜித் குமார் ரஷ்யாவிலிருந்து இந்தியா திரும்புவதற்குள் உலகின் பல இடங்களை 5000 கிலோமீட்டர்கள் நீண்ட பயணம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பான தல அஜித்குமாரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ட்ரெண்டாகும் அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

#Thala #Ajith is one such star who beautifully manages work-life balance.

After wrapping the #Valimai shoot, he has gone on a bike trip in #Russia.

As a passionate bike racer, he has plans to register 5,000kms with his bike around the world before returning to India. pic.twitter.com/UDgz9J2RGM

— Manobala Vijayabalan (@ManobalaV) September 3, 2021