தமிழ் சினிமாவில் ஆகசிறந்த கலைஞர் இளையராஜா. மக்களிசையை அனைத்து தரப்பு மக்களின் அன்றாட வாழ்வியலில் ஒரு அங்கமாக இசையை கொண்டு வந்து புரட்சியை வித்திட்டவர் இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் இவரது இசை வாய்ப்பிற்காக காலமும் இருந்தது. தமிழ் உள்ளிட்ட பல இந்தியாவில மொழிகளில் இளையராஜா ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார். தசாப்தங்களை கடந்தும் இன்றைய தலைமுறையினரையும் கவரும் அளவு பாடல்களை கொடுத்து வருகிறார். இந்திய சினிமாவில் ஒப்பற்ற கலைஞராய் திகழும் இளையராஜா அவர்களின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இளையராஜா அவர்களுக்கு பிறந்தாநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இளையராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் ட்விட்டரில் இளையராஜா சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு அதனுடன் முதல்வர் முக ஸ்டாலின், காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா! அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார்.

தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி! அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர். இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!..” என்று குறிப்பிட்டு புகழாரம் சூட்டி இதையடுத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பதிவு இணையத்தில் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.