சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகை மற்றும் டான்சர் ஆக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆனந்தி அஜய்.விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் ஆனந்தி.இதனை அடுத்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1.Mr&Mrs கில்லாடி உள்ளிட்ட சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தியுள்ளார்

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் அனந்தி அஜய்.மார்ச் 2017-ல் அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனந்தி.சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் அசத்தியுள்ளார் ஆனந்தி.

தாரை தப்பட்டை,வாலு,ரௌத்திரம்,டமால் டுமீல்,மீகாமன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார் ஆனந்தி.கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்,ராஜபார்வை,அம்மன் என பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல சீரியல் நடிகை என்ற பெயரை சம்பாதித்தார் ஆனந்தி.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ராசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது தான் இரண்டாவது முறையாக கர்பமாக இருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் ஆனந்தி.இவருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by 𝘼𝙣𝙖𝙣𝙙𝙝𝙞 𝘼𝙟𝙖𝙮 (@anandhi_offl)