தமிழகத்தில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழ் நாட்டில் மீண்டும் அமலுக்கு வருகிறது முழு ஊரடங்கு.

வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 9ஆம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை முதல் வார நாட்களில் தினசரி இரவு 10 மணிக்கு மேல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் திரையரங்குகள் அனைத்தும் 50% இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனவரியில் வெளியாக இருந்த S.S.ராஜமௌலியின் RRR மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் வரை இந்த ஊரடங்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இரவுநேர காட்சிகளும் ரத்தாக உள்ளதால் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. எனினும் படக்குழுவினரிடம் இருந்து இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளிவராத நிலையில் நாளை அல்லது அடுத்த சில தினங்களுக்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#NEWSUPDATE | தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல். #Lockdown #TNLockdown #CovidThirdWave #TN #SundayLockdown pic.twitter.com/2yii4t7WhS

— Galatta Media (@galattadotcom) January 5, 2022

#NEWSUPDATE | நாளை முதல் தமிழ்நாட்டில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்!#Lockdown #TNLockdown #CovidThirdWave #TN #NightLockdown pic.twitter.com/iscwxn3Eoc

— Galatta Media (@galattadotcom) January 5, 2022