இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி விஜய் இணையும் தளபதி 68 படத்தில் நடித்தது குறித்து நடிகை தமன்னா நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் பேசியிருக்கிறார். இந்திய் சினிமாவின் முன்னணி நட்சத்திரக்காரர்கள் ஒருவராக வலம் வரும் நடிகை தமன்னா சமீபத்தில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் ஆண்தாலஜி சீரிஸில் ஒரு எபிசோடில் நடித்து இருந்தார். இதை அடுத்து இந்த 2023 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து தமிழ்நாடு நடிப்பில் அட்டகாசமான படங்கள் வெளிவந்த காத்திருக்கின்றன. அந்த வகையில்,முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

அதேபோல் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து போலா ஷங்கர் திரைப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். அஜித் குமாரின் சூப்பர் ஹிட் திரைப்படமான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி இருக்கும் போலா ஷங்கர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக தற்போது முதல் முறை மலையாள சினிமாவில் கால் எடுத்து வைக்கும் நடிகை தமன்னா மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான திலீப் நடிப்பில் உருவாகும் பாந்திரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் தொடர்ந்து ஹிந்தியில் வேதா எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. முதல் முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி 68 தொகை படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் நடிகை தமன்னா தளபதி 68 படம் குறித்து பேசினார்.

அப்படி பேசும் போது முதலில், "தளபதி விஜய் அவர்களை சந்தித்தால் என்ன கேள்வி கேட்பீர்கள்?" என கேட்டபோது, "தளபதி 68 திரைப்படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதை தான் முதலில் கேட்பேன்" என தமன்னா பதில் அளித்து இருந்தார். தொடர்ந்து பேசியபோது "தளபதி 68 திரைப்படத்தின் கதாநாயகி நீங்கள் தான்!" என நாம் சொன்ன போது, "நான் இது நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். கலாட்டா இது நடக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்பதை சொல்ல கலாட்டா உதவ வேண்டும். இது இன்னும் உண்மையாக இல்லை. ஆனால் நடக்கும் என நாம் நம்புவோம். இது உண்மை இல்லை மக்களே ஆனால் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்." என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்யமான அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னாவின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.