இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. அனிரூத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன் லால், விநாயகன், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷராப் உள்ளிட்ட இந்திய திரைத்துறையின் முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் ரதமன்னா, ரம்யா கிருஷ்ணன், ‘ராக்கி’ புகழ் வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர். தற்போது பிரம்மாண்டமாக ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு செய்கிறார் நிர்மல். மேலும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ‘முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக முன்னதாக டீசர் முன்னோட்டம் வெளியானது. இந்த டீசர் இணையத்தில் தீயாய் பரவி டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜெயிலர் படப்பிடிப்பு விரைவில் முடித்து வரும் கோடை நாட்களில் வெளியாகும் என்று தகவல் முன்னதாக வெளியானது.ஆனால் படம் நிறைவடைய இன்னும் காலம் தேவைப்படும் என்பதால் படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தில் நடிக்கும் தமன்னா தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இயக்குனர் நெல்சன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை தமன்னா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி போன்ற பல மொழி படங்களில் பிரபலமானவர். திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் கதாநாயாகியாக பணியாற்றியுள்ளார். முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நேரத்தில் இருந்தே இவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.