நடிகர் சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் GLIMPSEக்கு “இதுவரை தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக” என ஒரு ஸ்பெஷல் கிடைத்திருக்கிறது. தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் தரமான கதை களங்களை தேர்ந்தெடுத்து மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்று வரும் நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் அனைத்தும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறன் உடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வாடிவாசல் படத்திற்காக பிரத்யேகமாக ஒரு ஜல்லிக்கட்டு காளை ரோபோவாக அனிமேட்ரானிக்ஸ் முறையில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனது நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விருதுகளை வென்று குவித்த சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யா மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இதனிடையே தனது திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட படைப்பாக மிகப்பெரிய பொருட்செலவில் தற்போது சூர்யா நடித்து வரும் படம் தான் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிற கங்குவா திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கதாநாயகியாக நடிக்கிறார். மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் கங்குவா திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் K.ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் முதல் GLIMPSE வீடியோவை நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக ஜூலை 23ம் தேதி சரியாக 12.01 மணிக்கு வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த சர்ப்ரைஸாக கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இன்டர்நேஷனல் கதை களத்தில் இருக்கும் படமாக கங்குவா படம் இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் GLIMPSE வீடியோ ஆங்கிலத்தில் தற்போது வெளி வந்திருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் GLIMPSE ஆங்கிலத்தில் வெளியாவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த GLIMPSE வீடியோ இதோ…