ரிலீஸ் தேதியை நெருங்கிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயலலிதா திரைப்படத்திலிருந்து புதிய புரோமோ வீடியோக்கள் வெளிவந்துள்ளன. இந்திய சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக கடந்த 48 ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்த திரைப்படங்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் மிக முக்கிய கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். முன்னதாக தனது 170-வது திரைப்படமாக ஜெய் பீம் படத்தில் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். குறிப்பாக தனது திரைப் பயணத்தில் 171 வது திரைப்படமாக உருவாகும் தலைவர் 171 திரைப்படத்தில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்க இருப்பதாக தெரிகிறது. இந்த தலைவர் 171 திரைப்படத்தின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோவான ஜெயிலர் ஷோகேஸ் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் புது ப்ரோமோ வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகின. அந்த வகையில் ஜெயிலர் இசை வெளியீட்டுற்கு பிறகு ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலின் ஒரு ப்ரோமோ வீடியோவும், நெல்சனின் டச்சில் ரஜினிகாந்த் அசத்தும் காமெடி & தமன்னாவின் துள்ளலான நடனத்தில் காவாலா பாடல் ஷாட்டுகள் கொண்ட ஒரு ப்ரோமோவும், பேரனோடு முத்துவேல் பாண்டியன் யூட்யூப் வீடியோக்கள் செய்யும் கலக்கலான ஒரு ப்ரோமோவும் என மூன்று புரோமோக்கள் வெளிவந்து தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட அட்டகாசமான அந்த மூன்று புது ப்ரோமோ வீடியோக்களை கீழே உள்ள லிங்க்குகளில் காணலாம்.