உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான கோல்டன் டிக்கெட் குறித்து BCCIக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.என்றென்றும் இன்றிய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயினர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக 500 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் ஜெயிலர் எனும் மெகா ஹிட் கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தலைவர் 171 படத்தில் கைகோர்த்துள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி தலைவர் 171 படத்தில் இணைகிறது. தலைவர் 171 படத்திற்கும் அனிருத் இசை அமைக்கிறார். மேலும் தலைவர் 171 குறித்த இதர தகவல்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக உருவாக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் முக்கியமான கவுரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தனது திரைப் பயணத்தில் 170-வது படமாக ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் இயக்குகிறார். இதனிடையே 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கான 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் அக்டோபர் 5-லிருந்து நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிசிசிஐ அதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி இருக்கிறது. பிசிசிஐயின் செயலாளர் ஜே ஷா, ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேற்று செப்டம்பர் 19ஆம் தேதி நேரில் சந்தித்து இந்த கோல்டன் டிக்கெட்டை வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது பிசிசிஐக்கு நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அந்த பதிவில், "2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கான பெருமைக்குரிய கோல்டன் டிக்கெட்டை எனக்கு வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அன்பிற்குரிய ஜேஷாஜி உங்களை சந்தித்தது மகிழ்ச்சி உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி" என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அவர்களின் அந்தப் பதிவு இதோ...