தான் என்றென்றும் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்பதை ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அன்றும் இன்றும் என்றும் என இந்திய சினிமா ரசிகர்களின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்கள் தனது திரை பயணத்தில் 47 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அதே வேகத்தோடு அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கவுரவ வேடத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் #தலைவர்170 படத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் #தலைவர்170 படத்தின் படப்பிடிப்பு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் #தலைவர்171 திரைப்படத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிதத ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான ஜெயிலர் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. ஆரம்ப முதலே ரிப்பீட் மோடில் ரசிகர்கள் கொண்டாடிய ஜெயிலர் திரைப்படம் இரண்டு வார இறுதியில் 525 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக சாதனை படைத்தது. வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஜெயிலர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்துள்ளது.

எனவே இந்த 25 நாள் வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் படக்குழு மரணமாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஸ்டைலில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான ஆக்சன் காட்சிகளின் தொகுப்பாக சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் வசனத்தோடு வெளிவந்திருக்கும் இந்த 25 நாள் கொண்டாட்ட வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அட்டகாசமான அந்த வீடியோ இதோ…