ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பக்கா அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னராக வெளிவந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் வளைகுடா நாடுகளில் இதுவரை எந்த தென்னிந்திய படமும் செய்யாத அதிரடி சாதனை படைத்துள்ளது. இந்திய சினிமாவில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் & அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்க தவறின. அதே போல் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் வசூல் ரீதியில் வெற்றி பெற்ற போதும் சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் தான் இயக்குனர் நெல்சன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவானது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸானது. ரிலீஸான வெறும் 4 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் 105 கோடி ரூபாய் வசூலித்த ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்தில் இறுதியில் 375.40 கோடி ரூபாய் வசூலுக்கு மிகப்பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து இரண்டாவது வார இறுதியில் 525 கோடிக்கு மேல் ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியாக இன்டஸ்ட்ரிக்ட் ஜெயலலிதா திரைப்படம் தற்போது மாறியிருக்கிறது. தொடர்ந்து ரிப்பீட் மோட்டில் ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தை கொண்டாடி வருவதால் வரும் நாட்களில் இந்திய அளவில் இன்னும் பெரிய வசூல் செய்து இந்திய பாக்ஸ் ஆபிஸில் புதிய உச்சத்தை ஜெயிலர் திரைப்படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அடுத்த ஓரிரு தினங்களில் ஜெயலலிதா திரைப்படத்தின் மூன்று வார வசூல் நிலவரம் வெளிவரும் என தெரிகிறது.

இதனிடையே தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மற்றொரு அதிரடி சாதனை செய்துள்ளது. பஹ்ரைன், குவைத், ஈராக், ஓமன், கட்டார் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வளைகுடா நாடுகளில் இதுவரை எந்த தென்னிந்திய திரைப்படமும் படைத்திராத மாபெரும் வசூல் சாதனையை ஜெயிலர் திரைப்படம் தற்போது படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிநாடுகளில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்டிருக்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயிலர் படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வளைகுடா நாடுகளில் இதுவரை எந்த தன் இந்திய படமும் படைத்ததாக அதிக வசூல் செய்திருக்கிறது" என தெரிவித்துள்ளது. ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…