உலக அளவில் மிகப் பிரபலமான கவர்ச்சி நடிகையாக அறியப்படும் நடிகை சன்னி லியோன் தற்போது இந்தியத் திரையுலகில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, மலையாளம் & கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

முன்னதாக தமிழில் நடிகர் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து ஹாரர் திரில்லர் திரைப்படங்களாக தயாராகிவரும் ஷெரோ மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களிலும் சன்னி லியோன் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் தயாராகி வரும் கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் சன்னிலியோன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரியாமணி, ஜாக்கி ஷெராப் மற்றும் சாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஃபிலிமினாட்டி என்டர்டெயின்மென்ட் மற்றும் விசில் மேன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள கொட்டேஷன் கேங் படத்தை இயக்குனர் விவேக் குமார் எழுதி இயக்கியுள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில் K.J.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் கொட்டேஷன் கேங் படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இதோ…

Life ?

Hmm.. Life???

It's just a #multilayered #mystery before you #die.@bindasbhidu @sunnyleone@priyamani6 @vivekkumarknan @I_m_Gayathri @Its_Filminati@whistlemanFilms#Quotationgang#Quotationgangfirstlook pic.twitter.com/CaGdmRjsYk

— Sunny Leone (@SunnyLeone) March 30, 2022