தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சுந்தர்.C.-ன் மாஸ்-கமர்ஷியல்-காமெடி திரைப்படங்களுக்கு என்று எப்போதும் மிகப் பெரிய ரசிகர்கள் மத்தியில் தனி ஆர்வம் உண்டு. குறிப்பாக சுந்தர்.C-யின் ஹாரர் காமெடியான அரண்மனை சீரிஸ் திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அந்த வகையில், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அரண்மனை-3 படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. நடிகை குஷ்புவின் ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவான அரண்மனை-3 படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டது.

அரண்மனை-3 படத்தில் இயக்குனர் சுந்தர்.C, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகிபாபு, விவேக், மைனா நந்தினி, மனோபாலா, நளினி, சாக்ஷி அகர்வால், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் C.சத்யா இசையமைக்க, U.K.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து சமீபத்தில் ZEE5 OTT தளத்தில் அரண்மனை 3 திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் வெற்றி பெற்ற அரண்மனை 3 திரைப்படம் ZEE5 OTT தளத்திலும் வெற்றியை தொடர்கிறது. படம் வெறும் 12 நாட்களில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து அரண்மனை 3 புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7 Crore streaming minutes in just 12 days! 🔥Watch 2021's biggest horror-comedy blockbuster #Aranmanai3 only on ZEE5https://t.co/zL2UzMUeI9 #SundarC @RaashiiKhanna_ @iYogiBabu @khushsundar @ssakshiagarwal @CSathyaOfficial @ZEE5Tamil pic.twitter.com/FCLiXeEqqr

— Arya (@arya_offl) December 1, 2021