தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் 13 இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த படம் இன்று இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி கலவையான வரவேற்பை பெற்று வருகிறது.பல இடங்களில் சிறப்பு ரசிகர் காட்சிகள் கொண்டாட்டங்கள் என திரையரங்குகள் திருவிழா கோலம் கொண்டு உள்ளன.

இந்த படம் பல இடங்களில் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் COO செம்பியன் இந்த படம் அனைத்து பழைய சாதனைகளை அடித்து நொறுக்கி உலகம் முழுவதும் புது சாதனை படைத்துள்ளது என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.அவரது ட்வீட்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்

The Mighty # Beast takes an Humongous Opening, smashing all previous records 💥🎉Unbelievable craze and collections Worldwide. Thank you one and all 🙏

— c.sembian sivakumar (@sembian_) April 13, 2022