கலைக்கு மொழியில்லை எனும் பழமொழி உண்டு. அதற்கு ஏற்றார் போல் அனைத்து மொழி திரைப்படங்களையும் பார்த்து ரசித்து வருகிறோம். நமக்கு தெரிந்த மொழியில் திரைப்படங்களை காணும்போது, கதாபாத்திரங்களுடன் ஒன்றிக்கொள்ள முடிகிறது. பிற மொழி திரைப்படங்களை காண்பதற்கும் இந்த சப்டைட்டில் எனும் கலை தான் உதவி புரிகிறது. இதனை திரை விரும்பிகள் மத்தியில் கொண்டு சேர்க்க உதவுபவர் தான் சினிமா காதலரான வினோத் CJ.

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஹெட்டாக பணிபுரிகிறார் வினோத். சினிமா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்து அதனை உறுதி செய்த பிறகே சமூக ஊடங்கங்களுக்கு தெரிவிக்கிறார். திரைப்பட வசனங்களின் தரம் குறித்த தகவல்களை சேகரிக்க உதவுகிறார்கள் அவரது நண்பர்கள். வசனம் தெளிவின்மை போன்ற பிரச்சினையை பார்வையாளர்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் வினோத்.

சினிமா என்பது அனைவருக்கும் பொதுவானது, இங்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது எனும் அடிப்படை விஷயத்தை நம்முள் செலுத்துகிறார் வினோத். கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து தற்போது வார்த்தைகளால் வருடும் சப்டைட்டில் கலைஞனாக திகழும் வினோத்தின் பணியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.