இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேல ன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராகவும், முதல் காட்சியில் வில்லன் நடிகராகவும் வந்து மிரள வைத்த ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண் சிவா தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கும் ஜெயிலர் படத்திலும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா சினிமா சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சிவா அவர்கள் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், “கமல் சார் எவ்வளவோ படம் பண்ணி இருக்கார்… நான் வேட்டையாடு விளையாடு பண்ணேன்... முதல் காட்சியில் கமல் சாருடன் அந்த "கண்" காட்சியில் நடித்தது நான் தான். அப்போது கமல் சார் ஒரு பெரிய லெஜெண்ட். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக் கொண்டோம். அவரைப் பார்த்து வளர்ந்தது தான். ஆனால் அவர் படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றும் போது, படத்தின் ஆரம்பத்திலேயே முதல் காட்சி பெரிதும் பேசப்பட வேண்டும் என கௌதம மேனன் சார் சொன்னார். அதற்காக நாங்கள் உட்கார்ந்து கலந்து ஆலோசித்து லொகேஷனில் இருந்து கோரியோகிராபிலிருந்து அவருக்கு எப்படி என்ட்ரி கொடுக்கலாம்... அவரையே என்ட்ரி கொடுக்கலாமா? அல்லது வேறு கேரக்டரை என்ட்ரி கொடுக்கலாமா? வேட்டையாடு விளையாடு படத்தின் முதல் பத்து நிமிடம் இடைவேளை வரையில் பேசப்பட வேண்டும். அதன் பிறகு இடைவெளியில் இன்னொரு BANG இருக்கிறது. அதன் பிறகு இரண்டாவது பாதி... இப்போது கமல் சார் எல்லாமே செய்து விட்டார்… இப்போது அவரை வைத்து நான் என்ன கம்போஸ் செய்வது, இதில் வேறு நான் அவரோடு நடிக்க வேண்டும் அந்த முதல் காட்சியில்... அவரோடு நடிப்பதே ஒரு பெரிய விஷயமாக இருக்கும். அதெல்லாம் சரியாக கோரியோகிராஃப் செய்து இந்த முதல் காட்சி திரையுலகில் பேசப்பட வேண்டும் மாஸ்டர் ரொம்ப நன்றாக வர வேண்டும் என கௌதம மேனன் சார் சொல்லி அதே மாதிரி வந்தது. எல்லாம் கடின உழைப்பு தான்.. இப்போது கூட அந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். அதில் கூட கொஞ்சம் நம்புகிற மாதிரி இருக்கும் ஆப்ஷன் காட்சிகள் எல்லாம்... கொஞ்சம் லைவ் ஆக்ஷன் காட்சிகளாக இருக்கும்.. ஒரு உண்மையான தேர்ந்த காவல்துறை அதிகாரி எப்படி பண்ணுவாரோ? அந்த மாதிரி அப்படி என்றால் ஜெயிலர் படத்தில் ரஜினி சாருக்கு எப்படி செய்திருப்போம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் இன்னும் பிரமாதமாக வந்திருக்கிறது. நானே அந்த படத்திற்காக காத்திருக்கிறேன் எப்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என காத்திருக்கிறேன்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட ஸ்டண்ட் சிவா அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.