இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்புக்குப் பின் அடுத்த பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது RRR. திரைப்படம். RRR படத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்கும் RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவில் தயாராகும் RRR படத்திற்கு இசை அமைப்பாளர் M.M.கீரவாணி இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. RRR படத்தின் முதல் பாடலாக நட்பு என்னும் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் RRR படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது. முன்னதாக வருகிற அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் 13ஆம் தேதி படம் வெளியாகாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து RRR படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Team #RRRMovie is forced to move release from October 13th, 2021 as theatres across the world aren't fully functional !!

A new date will be decided and announced soon.@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @DVVMovies @LycaProductions

— Nikil Murukan (@onlynikil) September 11, 2021