தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் RRR திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க, பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கும் இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக RRR திரைப்படம் தயாராகியுள்ளது.

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.உலகெங்கும்த்துள்ள RRR திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். KK.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான RRR திரைப்படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ, Glimpse மற்றும் ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ள RRR திரைப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

வருகிற ஜனவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் RRR படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிப்பதாலும் மூடப்படுவதாலும் RRR ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாகவும் விரைவில் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று RRR படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர் .

Keeping the best interests of all the involved parties in mind, we are forced to postpone our film. Our sincere thanks to all the fans and audience for their unconditional love. #RRRPostponed #RRRMovie pic.twitter.com/JlYsgNwpUO

— RRR Movie (@RRRMovie) January 1, 2022