தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகவும் குறைவு அதிலும் வெற்றியடைந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் வெகு சிலர் மட்டுமே,அதில் முக்கியமான ஒருவர் இயக்குனர் சுதா கொங்காரா.துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுதா கொங்காரா,இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சில வருடங்கள் கழித்து மாதவன் நடித்த இறுதி சுற்று படத்தினை இயக்கினார் சுதா கொங்காரா.இந்த படம் பெரிய வெற்றியை பெற்று இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படத்தை இயக்கினார்,பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் அதீத வரவேற்பை பெற்றது.

ஆஸ்க்கார் நாமினேஷன் வரை இந்த படம் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து இவர் netflix தளத்தில் வெளியான பாவக்கதைகள் Anthology கதையில் தங்கம் என்ற பகுதியை இயக்கியிருந்தார்.இவர் அடுத்ததாக சில படங்களை இயக்கவுள்ளார் என்று சில போலி ட்விட்டர் பக்கங்கள் மூலம் வதந்திகள் பரவி வந்தன.

குறிப்பாக சுதா கொங்காராவின் பெயரிலேயே இந்த போலி கணக்குகள் தொடங்கப்பட்டன.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக ப்ளூ டிக்குடன் இணைந்துள்ளார் சுதா கொங்காரா.

Welcoming my most favorite person @Sudha_Kongara to Twitter . This is her only official id…. ✨💫🙌 https://t.co/jdYSpbtFTY

— G.V.Prakash Kumar (@gvprakash) March 31, 2022