சின்னத்திரையின் வழியே தமிழக மக்களின் மனதில் நகைச்சுவை மன்னனாக இடம் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெள்ளித்திரையிலும் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்து வருகிறார்.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாக்டர் திரைப்படம் மெகா ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மார்ச் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. மேலும் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் A.R.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படமும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் உருவாகும் #SK20 புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஜாதி ரத்னலு படத்தின் இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் , சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் #SK20 படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், தமன்.S இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையை நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் தொடங்கப்பட்ட #SK20 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 17ஆம் தேதி) அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக படக்குழுவினர் #SK20 திரைப்படத்தின் பூஜை மற்றும் புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். கலக்கலான அந்த வீடியோ இதோ…

Team #SK20✨wishes the Complete Entertainer @Siva_Kartikeyan a very Happy Birthday 🤩❤️

Here’s a Hilarious Glimpse of the Pooja Ceremony 🪔#HappyBirthdayPrinceSK 🤘@anudeepfilm @MusicThaman @sureshProdns @SVCLLP @ShanthiTalkies #NarayanDasNarang@SBDaggubati @puskurrammohan pic.twitter.com/iT75o4KipP

— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) February 17, 2022