தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக, முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையிலான அழகான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மெகா ஹிட்டானது. தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஏலியன் சயின்ஸ்ஃபிக்சன் திரைப்படமான அயலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் S.J.சூர்யா, சமுத்திரகனி, சூரி, விஜய் டிவி சிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், RJ விஜய், ராஜூ ஜெயமோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் வெளியான டான் படத்தின் ஜலபுல ஜங்கு பாடல் ஹிட்டடித்த நிலையில், நடிகர் S.J.சூர்யா டான் படத்தில் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் டான் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#DON Dubbing Done for ⁦@iam_SJSuryah⁩ sir💐💐
It was a pleasure working with you sir pic.twitter.com/aAyxjbfod3

— Cibi Chakaravarthi (@Dir_Cibi) December 25, 2021