தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராகவும் இயகுனராகவும் வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. அஜித் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து மிரட்டியிருக்கும் வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் பின் தொடர்ந்து தளபதி விஜயுடன் குஷி படத்தில் கூட்டணி அமைத்தார். இளைஞர்களை கவர்ந்து இன்றும் ரசிகர்களுக்கு நெருக்கமான படமாக குஷி திரைப்படமாக இருந்து வருகிறது. பின் பல படங்களை இயக்கிய இவர் ஹீரோவாகவும் களம் இறங்கி பல படங்களில் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் மார்க் ஆண்டனி, கேம் சேஞ்சர்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என வரிசையாக மிக முக்கியமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இதனையே எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்து வரும் ஜூன் 16 ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘பொம்மை’. இப்படம் குறித்தும் தன் திரைப்பயணம் குறித்தும் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற எஸ்.ஜே.சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

மேலும் இந்த சிறப்பு நிகழ்வில் ஒரு பங்காக எஸ் ஜே சூர்யாவின் நண்பரும் பிரபல நடிகரும் இயக்குனருமான மாரி முத்து கலந்து கொண்டு எஸ்ஜே சூர்யா வுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் எஸ்ஜே சூர்யாவிற்கு முதல் படம் வாலி வாய்ப்பு கிடைத்த தருணம் குறித்து மாரி முத்து பேசுகையில்,

"ஆசை படத்தில் வேலை பார்க்கும்போது கடுமையான உழைப்பாளி சூர்யா. எதையும் பொருட்படுத்தாமல் வேலை வேலைனே இருப்பார். ஒரே ஒரு உதாரணம் சொல்லனும்னா.. ஆசை படத்தில் ஒரு நாய்க்குட்டி வரும். அந்த நாய்க்குட்டி டெல்லி படப்பிடிப்புக்கு வரவேண்டிருக்கு.. ஆலயம் அலுவலகத்தில் சூர்யாவிடம் அந்த நாய்க்குட்டியை கையில கொடுத்து டெல்லி பயணத்திற்கு டிக்கெட்டும் பணமும் கொடுத்து வர சொல்லிட்டாங்க..

முன்பதிவு இல்லாத பெட்டியில் நாய் உயிரை காப்பாத்தி கொண்டு போகனும். சூர்யா ஆட்டோ பிடிச்சு சென்ட்ரல் போனார். அங்கு ஒரு தூக்கு வாலியில் பால் வாங்கிட்டு ரயில் ஏறிட்டார். இரண்டு இரவு இரண்டு பகல்.. நாய்குட்டியை உயிரோடு காப்பாத்தி கொண்டு போய் சேர்த்துட்டார்.. அவருக்கு அந்த வேலை யில் குறிக்கோளா இருந்தார்.வாலி படமெல்லாம் சம்பளம் வாங்கமா இயக்கினார். ஆசை படப்பிடிப்பு இறுதியில் சுந்தர புருஷன் படத்தில் வேலை பார்க்க கிளம்பிட்டார். அதன்பின் உல்லாசம் படத்தில் வேலை பண்ணார். அஜித் சார் இவர் வேலையை பார்த்துட்டு எனக்கு ஒருகதை பண்ணுனு கேட்டார். அப்படி வந்த படம் தான் வாலி." என்றார்‌ மாரி முத்து.

மேலும் எஸ்.ஜே.சூர்யா நமது கலாட்டா தமிழ் சிறப்பு நேர்காணலில் பல சுவாரஸ்ய நினைவுகளை பகிர்ந்து கொண்ட முழு வீடியோவை காண..