பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஹீரோ. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே வருகிறது. இவானா, அர்ஜுன், அபே தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்தது.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது படத்தின் மூன்றாம் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. ரோபோ ஷங்கருடன் சிவகார்த்தியேகன் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்திற்கு பக்கமலமாக அமைந்துள்ளது.

இதற்கு முன் வெளியான இரண்டு நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியது. சில தினங்களுக்கு முன் ஹீரோ திரைக்கதை திருட்டு என குற்றச்சாட்டு கிளம்பியது. இயக்குனர் பி.எஸ்.மித்ரன் பத்திரிகையாளர்கள் முன் தோன்றி தெளிவு படுத்தினார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் உருவாகி வருகிறது.