தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் நடித்துள்ள,நடித்து வரும் சில படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன,அடுத்ததாக சில முக்கிய படங்களில் நடிக்கவும் உள்ளார் சிவகார்த்திகேயன்.நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களை ஏற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.

இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர் தனது மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்திருந்தார்.இவருக்கு ஆராதனா என்ற மூத்த மகளும் , குகன் என்ற இளைய மகனும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆராதனா கனா படத்தில் ஒரு பாடல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆராதனா தனது 9ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு பிரபலங்களும்,ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.சிவகார்த்திகேயன் ஆராதனாவுடன் இருக்கும் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)