தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக டாக்டர் படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.

SK 20 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த Jathi Rathnalu பட இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக நண்பன்,பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்ஸா பணியாற்றுகிறார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் காரைக்குடியில் தொடங்கியுள்ளது.சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இதுகுறித்த சில புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

The Entertainment Journey Begins ✈️#SK20 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🕊🇮🇳
A Telugu - Tamil Bilingual Film Launched today at Karaikudi with a formal pooja ceremony 🪔

Regular Shoot Begins today🎬@Siva_kartikeyan @anudeepfilm @MusicThaman @manojdft @SVCLLP @SureshProdns @ShanthiTalkies #SK20Begins 💫 pic.twitter.com/Usw6F3Vtwj

— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) February 10, 2022