தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ராம்குமாருடன் SK 14,இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் ஹீரோ மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இவர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தனது முதல் சம்பளம்,முதல் படம் உள்ளிட்டவை குறித்து சிவகார்த்திகேயன் பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.தான் ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தையும்,அதில் இருந்து சில காரணங்களால் வெளியேறிய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்