அசத்தலான திறமையுடன் சின்னத்திரையில் ஜொலித்த சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருக்குபோதே தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். நகைச்சுவை நடிகராக சினிமா துறையில் அடியெடுத்து வைத்து பின் ‘மெரினா’, ‘மனம் கொத்தி பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிசையமானர். அதன் பின் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து சிவகார்த்திகேயனை புகழ் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. விடா முயற்சியில் தன்னை தானே மெருகேற்றி தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தார் சிவகார்த்திகேயன். கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டாக்டர்’ திரைப்படம் மற்றும் 2022 ல் வெளியான 'டான்' திரைப்படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி 100 கோடி வசூல் பிளாக் பஸ்டர் கொடுக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் சிவா நடிப்பில் முன்னதாக வெளியான ‘பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் சிவகர்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. அதன்படி 'மாவீரன்', 'அயலான்' போன்ற படங்கள் சிவகார்த்திகேயனின் வெளியீட்டு பட்டியலில் உள்ளது. மேலும் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் 'SK24' படமும் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகவிருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் முதல் பாடலின் சிறப்பு காட்சி இன்று வெளியானது அசத்தலான சிவகார்த்திகேயனின் குத்து ஆட்டத்தின் சில காட்சிகளை சேர்த்து பரத் சங்கர் இசையில் “Scene ah Scene ah” பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. முதல் பாடல் வரும் பிப்ரவரி மாதம் 17 ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளது படக்குழு.

மண்டேலா திரைப்பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதீ ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த பாடல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.துள்ளலான இசையில் வெளியான இந்த பாடலில் glimpse தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.