தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா எண்டர்டெய்னிங் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022 தீபாவளி வெளியீடாக ரிலீசான ப்ரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது.

இதனை அடுத்து முதல் முறையாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் அடுத்து நடிக்க இருக்கும் சிவகார்த்திகேயன், முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள சைன்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமான அயலான் திரைப்படம் நிறைவடைந்து இறுதி கட்ட வி VFX பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், “முன்னதாக கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் மாவீரன் திரைப்படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே அதிக கருத்து வேறுபாடுகள் வருகின்றன. மேலும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து சிக்கல், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதில்லை, மாவீரன் திரைப்படம் விரைவில் கைவிடப்படும் என்பது போன்று பல தேவையற்ற வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த அடிப்படையுமற்ற தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் மாவீரன் திரைப்படத்தை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. "உங்கள் அனைவரையும் அவை அனைத்தையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு மிகச் சரியாக நடைபெற்று வருகிறது. அனைவரது நினைவிலும் நிற்கும் ஒரு திரைப்படமாக கொடுக்க பணியாற்றி வருகிறோம்." என தெரிவித்து,
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்”

எனும் திருக்குறளை குறிப்பிட்டு வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். அந்தப் பதிவு இதோ…