தமிழ் திரை உலகின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆன டாக்டர் படத்தின் வெற்றியைத்
முன்னதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்சன் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இசைப்புயல் A.R.ரஹ்மான் இசை அமைத்துள்ள அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் உருவாகும் #SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் #SK21 படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதனிடையே இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே 13'ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பாலசரவணன், RJ விஜய், காளி வெங்கட், ராஜு ஜெயமோகன், சிவாங்கி ஆகியோர் இணைந்து நடித்துள்ள டான் படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்திலிருந்து அசத்தலான ஸ்பெஷல் போஸ்டர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த போஸ்டர் இதோ…

Here's a special poster from our #DON 😎 Get ready for the celebration 🤩🎉🎊 In theatres from May 13 🎟️🎥#DONFromMay13@Siva_Kartikeyan @KalaiArasu_ @SKProdOffl @Udhaystalin @RedGiantMovies_ @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @SonyMusicSouth @DoneChannel1 pic.twitter.com/OXGX0Y7orx

— Lyca Productions (@LycaProductions) April 14, 2022