தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படம் சென்சார் செய்யப்பட்டுளள்து என்றும் இந்த படத்திற்கு யூ சர்டிபிகேட் கிடைத்துள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் 164 நிமிடங்கள் இருக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.